Pages

Saturday, June 27, 2015

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர இணையதள வழியாகக் கலந்தாய்வு

அரசு மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்திலும், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள வழியாக ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு ஜூலை 1 முதல் 4 வரை நடைபெறவுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.கலந்தாய்வுக்கு வரும்போது தேவையான அனைத்து சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும். கீழ் குறிப்பிட்டுள்ளபடி கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை 1: சிறப்புப் பிரிவினர் (மாற்றுத் திறனாளிகள், சுதந்திர போராட்டத் தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள்ராணுவத்தினரின் மகன்,மகள்) ஆங்கில மொழி, தெலுங்கு மொழி, உருது மொழி, தொழிற் பிரிவு, கலைப்பிரிவு, அறிவியல் பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு நடைபெறும்.
ஜூலை 2: தொழில், கலை பிரிவுகள்.
ஜூலை 3, 4: அறிவியல் பிரிவு.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.