Pages

Monday, June 29, 2015

சித்தா, ஆயுர்வேதா படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

தமிழகத்தில், ஆறு அரசு கல்லுாரிகளில், சித்தா (பி.எஸ்.எம்.எஸ்.,), ஆயுர்வேதா (பி.ஏ.எம்.எஸ்.,), யுனானி (பி.யு.எம்.எஸ்.,), நேச்சுரோபதி மற்றும் யோகா (பி.என்.ஒய்.எஸ்.,), ஓமியோபதி (பி.எச்.எம்.எஸ்.,) ஆகிய மருத்துவப் பட்டப் படிப்புகள் உள்ளன.நடப்பாண்டில், இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், ஆறு மருத்துவக் கல்லுாரிகளில் இன்று துவங்குகிறது.

* சென்னை அரும்பாக்கம், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லுாரிகள்
* சென்னை அரும்பாக்கம் யுனானி மருத்துவக் கல்லுாரி, யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரிகள்.
* மதுரை திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லுாரி
* நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரி ஆகியவற்றில் விணணப்பம் கிடைக்கும்.
இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
விண்ணப்ப கட்டணம், 500 ரூபாய்; சிறப்பு பிரி
வினருக்கு, 100 ரூபாய். ஜூலை 24ம் தேதி வரை விண்ணப்பம் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூலை 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அஞ்சல் துறை, கூரியர் நிறுவனங்களில், குறித்த நாட்களுக்கு முன் தேதியில் பதிவு செய்திருந்தாலும், கால தாமதமாக வரும் விண்ணப்பங்கள்
ஏற்கப்படாது. மேலும் விவரங்களுக்கு, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், இவ்வாறு, இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.