குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணனை சென்னை பெற்றோர் ஆசிரியர் கழக செயலராக இடமாற்றம் செய்ததற்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் உட்பட 13 முதன்மை கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ராதாகிருஷ்ணன் சென்னையில் பெற்றோர் ஆசிரியர் கழக செயலராக மாற்றப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டார். நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புதிய முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது புதிய அதிகாரி, விடைபெற்று செல்லும் அதிகாரிக்கு ஆசிரியர் அமைப்பினர் சால்வை அணிவித்துக்கொண்டிருந்தனர். சிறிதுநேரத்தில் குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை இடமாற்றம் செய்த உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த விவகாரம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டது செல்லுமா, அல்லது ராதாகிருஷ்ணனே முதன்மை கல்வி அலுவலராக தொடர்வாரா என்ற கேள்வி கல்வித்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.