தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கும் நேரம் காலை 9.30 மணிக்கு பதிலாக 9 மணிக்கு தொடங்கும். வருகிற 24ந் தேதி முதல் இந்த புதிய கால அட்டவணை அமுலுக்கு வரும் என்று வாட்ஸ் அப்பில் இன்று தகவல் பரவியது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
வாட்ஸ் அப்பீல் பரவி வரும் தகவல் தவறானது. யாரோ விஷமத்தனமாக பரவி விட்டுள்ளார்கள். வகுப்பு நேரமும் 45 நிமிடத்தில் இருந்து 40 நிமிடமாக குறைக்கப்படுவதாக அந்த தகவல் கூறுகிறது. ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கம் போல் பள்ளிகள் தொடங்கும்.
இதுபற்றி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள், உதவி கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு விளக்கமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.