Pages

Saturday, June 13, 2015

24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி முறையால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 9 ம்வகுப்பு வரை முப்பருவ பாடநூல் முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல், பள்ளிகளின் பாடவேளை சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடவேளை 45 நிமிடமாக இருந்ததை 40 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

         இதுவரை 9.30 மணிக்கு துவங்கப்பட்ட பள்ளிகள் இனி காலை 9 மணிக்கே துவங்கும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வரும் 24ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

          ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை அன்று கடைசி ஒரு மணி நேரம் மாணவர்களின் பண்முக திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், ஆடுதல், நடித்தல், பாடு தல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழி, பழமொழி கூறுதல் போன்ற நடவடிக்கையில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்: காலை 9 மணிக்கு நடைபெறும் காலை வழிபாடு முறை வாரம் தோறும் திங்கள்கிழமை மட்டும் பொது காலை வழிபாட்டு கூட்டமும், மற்ற நாட்களில் அது வகுப்பறை நிகழ்வாகவும் அமைய வேண்டும்.
COURTESY : NAKKHEERAN (http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=144979)

5 comments:

  1. what is the source? pls provide the valid news. it create panic among teachers.

    jawahar

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Flash News:பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம்இல்லை: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவிப்பு
    தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கும் நேரம் காலை 9.30 மணிக்கு பதிலாக 9 மணிக்கு தொடங்கும். வருகிற 24ந் தேதி முதல் இந்த புதிய கால அட்டவணை அமுலுக்கு வரும் என்று வாட்ஸ் அப்பில் இன்று தகவல் பரவியது.இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

    வாட்ஸ் அப்பீல் பரவி வரும் தகவல் தவறானது.
    யாரோ விஷமத்தனமாக பரவி விட்டுள்ளார்கள். வகுப்பு நேரமும் 45 நிமிடத்தில் இருந்து 40 நிமிடமாக குறைக்கப்படுவதாக அந்த தகவல் கூறுகிறது. ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கம் போல் பள்ளிகள் தொடங்கும்.இதுபற்றி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள், உதவி கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு விளக்கமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    ReplyDelete
  4. Flash News:பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம்இல்லை: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவிப்பு
    தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கும் நேரம் காலை 9.30 மணிக்கு பதிலாக 9 மணிக்கு தொடங்கும். வருகிற 24ந் தேதி முதல் இந்த புதிய கால அட்டவணை அமுலுக்கு வரும் என்று வாட்ஸ் அப்பில் இன்று தகவல் பரவியது.இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

    வாட்ஸ் அப்பீல் பரவி வரும் தகவல் தவறானது.
    யாரோ விஷமத்தனமாக பரவி விட்டுள்ளார்கள். வகுப்பு நேரமும் 45 நிமிடத்தில் இருந்து 40 நிமிடமாக குறைக்கப்படுவதாக அந்த தகவல் கூறுகிறது. ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கம் போல் பள்ளிகள் தொடங்கும்.இதுபற்றி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள், உதவி கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு விளக்கமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    ReplyDelete
  5. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=144979

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.