Pages

Wednesday, May 20, 2015

திருப்பூர் TNPTF ஆர்ப்பாட்ட நிகழ்வுகள்

*காலை 10.30முதல் 11.30வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. 11மணிக்கு சுமார் 400 ஆசிரியர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

*சுமார் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு இருந்தனர்


*பின்னர் ஆசிரியர்கள் ஓரிருவராக கலைந்து மா.தொ.அலுவலக வளாகத்திற்கு நடந்து சென்றனர்.


*பின் உடுமலை,திண்டுக்கல் வட்டார மாவட்ட பேருந்து சுமார் 100ஆசிரியர்கள் மா.தொ.அலுவலகம் வந்தனர்

*STFIமுன்னால் பொறுப்பாளர் தோழர் கணேசன் டி.இ.ஓ வை சந்திக்க செல்ல காவலர் அனுமதி மறுத்தனர்

*தோழர் மோசஸ் தலைமையில் 500ஆசிரியர்கள் கோசம் எழுப்ப, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்த 300ஆசிரியர்களும் வந்து சேர்ந்தனர்

*கோசங்கள் விண்ணை பிளந்தன.
*திரு மோசஸ்,திரு முருகசெல்வராசன் போன்றோர் போராட்ட உரை நிகழ்த்தினர்

*பின் மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது

*உணவு வழங்க களப்பணியாற்றிய திருவாளர் கனகராஜா,ராஜ்குமார், மணிகண்டபிரபு,மகேஸ்,குழந்தை அற்புதராஜ்,ஜோசப் அவர்களுக்கு நன்றிகள்

*மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது

*ஆசிரியர்கள் அனைவரும் வாயிலில் அமர்ந்து கோசம் எழுப்பினர்

*நன்றி திரு ரஞ்சித்,முத்துச்சாமி,பாலசுப்பிரமணியன்,பாபு

*ஒரு மணி நேரத்துக்கு நீண்ட பேச்சுவார்த்தை முடிவில் ஆர்.டி.ஓ அவர்கள் ஆசிரியர் முன்னிலையில் வாக்குறுதி அளித்த பிறகே கலைந்து சென்றனர்

*மீண்டும் 22-5-15 அன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்

-போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

அநியாயங்கள் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் தட்டிக்கேட்கும் அனைவரும் என் தோழர்களே-சே குவேரா

நன்றியுடன் திருப்பூர் TNPTF

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.