Pages

Wednesday, May 20, 2015

ஆண்ட்ராய்டு ஃபோனில் மிக வேகமாக டவுன்லோடு செய்ய வேண்டுமா?

‘ஆண்ட்ராய்டு ஃபோனில் டவுன்லோடு செய்வதில் வேகம் இல்லை’ என்பது பலரின் குறை. இதற்குத் தீர்வு காணும் வகையில் தற்போது பல டவுன்லோடு மேனேஜர் மென்பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்வதன் மூலம் வெகு விரைவில், மிக சுலபமாக எதை வேண்டுமானாலும் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். அவற்றில் சில இங்கே...


* டவுன்லோடு மேனேஜர் ஃபார் ஆண்ட்ராய்டு: இந்த அப்ளிக்கேஷன் மற்ற அப்ளிகேஷன்களை விட மூன்று மடங்கு அதிக வேகத்தில் டவுன்லோடுகளை மேற்கொள்ளும்.

* அட்வான்ஸ்டு டவுன்லோடு மேனேஜர்: இந்த அப்ளிக்கேஷன் மூலமாக அதிகபட்சம் மூன்று ஃபைல்கள் வரை ஒரே சமயத்தில் டவுன்லோடு செய்ய முடியும்.


* டவுன்லோடு ப்ளேஸர்: இந்த அப்ளிக்கேஷனை அனைத்து வித பிரவுஸர்களிலும் பயன்படுத்த முடியும்.

* டவுன்லோடு ஆல் ஃபைல்ஸ்: உலகம் முழுவதிலும் சுமார் 15 லட்சம் பேர் இந்த அப்ளிக்கேஷனை பயன் படுத்தி வருகின்றனர். அந்தளவுக்கு திறன் மிக்கது.

* லோடர் டிராய்டு டவுன்லோடு மேனேஜர்: சிறிய அளவிலான இந்த அப்ளிக்கேஷன் எவ்வித ஃபைல்களையும், எந்த ஃபார்மேட்டில் இருந்தாலும் சுலபமாக டவுன்லோடு செய்யும் சிறப்புக் கொண்டது.

இன்னும் இதுபோன்று பல டவுன்லோடு மேனேஜர்கள் இன்றைக்கு சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டில் இனி எதையும் விரைவாக டவுன்லோடு செய்யலாம்!

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.