Pages

Monday, May 18, 2015

மீன்வள படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இந்த ஆண்டுக்கான (2015-16) இளங்கலை மீன்வள பட்டப் படிப்பு (பி.எஃப்.எஸ்சி) மற்றும் மீன்வள பொறியியல் (பிஇ) படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப் பினை தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் வெளியிட்டிருக் கிறது. அதன்படி, மீன்வள படிப்பு களுக்கு இன்று (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல் பல்கலைக் கழகத்தின் இணையதளத்தின் (www.tnfu.ac.in) மூலம் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். (தாள் வடிவிலான விண்ணப்பம் வழங்கப் படாது).

விண்ணப்பக் கட்டணம் ரூ.600. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.300 மட்டும். கட்டணத்தை ஆன்லை னிலேயே செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தையும் ஆன்லைனிலேயே சமர்ப்பித்துவிட வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 17-ம் தேதி மாலை 5 மணி வரை. மாணவர் சேர்க்கை தொடர்பான முழு விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ள லாம். மேலும், கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் 04365-240558 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்று தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.