Pages

Monday, May 18, 2015

அரசு ஊழியர் தற்காலிக பணிநீக்க நடவடிக்கையில் தலையிட முடியாது: ஐகோர்ட்

கடுமையான குற்றச்சாட்டுகள் இருப்பதால் அரசு ஊழியர் தற்காலிக பணிநீக்க நடவடிக்கையில் தலையிட முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் வணிக வரித்துறை உதவி கமிஷனராக பணியாற்றியவர் மதியழகன். இவர் கடந்த ஆண்டு ஏப்ரலில் ஓய்வுபெற வேண்டும். ஆனால் அவர் மீது நிலுவையில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த வழக்கை காரணம் காட்டி பணியில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். 


இதை எதிர்த்து ஐகோர்ட்டில் மதியழகன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-   இந்த வழக்கில் புலன் விசாரணை நடந்து வருகிறது. எனவே மனுதாரர் ஓய்வு பெற அனுமதிக்கப்படவில்லை. மனுதாரர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு கடுமையாக உள்ளது. 
எனவே இதில் தலையிட விரும்பவில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. என்றாலும், இந்த வழக்கு விசாரணையை லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்னும் 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நிவாரணம் கேட்டு கோர்ட்டை மனுதாரர் அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

குடிநீர் வழங்கல் வாரியத்தில் செயல் பொறியாளராக பணியாற்றியவர் தேவராஜ். இவர் இம்மாதம் 31-ந் தேதி பணி ஓய்வு பெற வேண்டும். ஆனால் அவர் மீது ஊழல் குற்றம் தொடர்பான வழக்கு இருப்பதால் அவரை ஓய்வு பெற அனுமதிக்காமல் தமிழக அரசு இடைக்கால பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து ஐகோர்ட்டில் தேவராஜ் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன், குடிநீர் வழங்கல் வாரியத்தின் சட்ட ஆலோசகர் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  எனவே இடைக்கால பணிநீக்க உத்தரவில் தலையிட விரும்பவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.