Pages

Tuesday, May 19, 2015

ஆசிரியைக்கு உடல்நலம் பாதிப்பு: பணியில் இருந்து விடுவித்து பணப்பலன்களை வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

கன்னியாகுமரியை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனு கூறி இருந்ததாவது:- என் மனைவி அல்போன்ஸ், நட்டலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. இதனால், அவரை பணியில் இருந்து விடுவித்து, பணப்பலன்களை வழங்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தேன்.
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் மனைவியை பணியில் இருந்து விடுவித்து, அவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பணப்பலன்களையும் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. 


இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். முடிவில், ‘மனுதாரரின் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரரின் மனைவியை பணியில் இருந்து விடுவித்து பணப்பலன்களை வழங்க கன்னியாகுமரி மாவட்ட கல்வி அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்‘ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.