ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான, சிவில் சர்வீசஸ் முதல் நிலைத்தேர்வு அறிவிப்பு, திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட, 36 வகை மத்திய அரசு பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு, ஆண்டுதோறும் மே மாதம் அறிவிக்கப்படும்.
இந்த ஆண்டுக்கான தேர்வு, மே, 16ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட், 23ல் முதல்நிலைத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நேற்று முன்தினம் திட்டமிட்டபடி அறிவிப்பு வெளியாகவில்லை. இதுகுறித்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) வெளியிட்ட அறிவிப்பில், மே, 16ம் தேதி தேர்வுக்கான அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.