மத்திய அரசு ஊழியர்களின், 'சர்வீஸ் புக்'கில், 'ஆதார்' எண் விவரத்தை குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு, அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து, எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து, அறிக்கை அளிக்குமாறு, அனைத்து துறைகளும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன. மொத்தம், 12 எண்களைக் கொண்ட, ஆதார் அடையாள எண், நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் அனை வரும்,
தங்களின் ஆதார் எண்ணை, தங்களின் சர்வீஸ் புக் எனப்படும், பணிப்புத்தகத்தில் குறிப்பிட வேண்டும் என, கடந்த ஆண்டு நவம்பர் மாதமே கேட்டுக் கொள்ளப்பட்டனர். அந்த உத்தரவு, எந்த அளவுக்கு நடைமுறைபடுத்தப் பட்டு உள்ளது என்பது குறித்து பதிலளிக்குமாறு, அனைத்து துறைகளின் தலைவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களின் பணிப்புத்தகத்தில், அவர்களின் பிறந்த தேதி, கல்வித்தகுதி, குடும்பம், சொத்து, வீட்டுக்கடன், சுகாதார காப்பீடு போன்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.