Pages

Saturday, May 2, 2015

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில்தொடங்க முடிவு

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் தொடங்க அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் 570-க்கும் மேற் பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 

இதில் அண்ணா பல் கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளும் அடங்கும். பிஇ, பிடெக் படிப்பில் சுமார் 2 லட் சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், மே 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் தமிழகம் முழுவதும் 60 மையங்களில் மே 6-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. இதற்காக 2.4 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பொறியியல் படிப் புக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள், தங்கள் பாலினத்தை குறிப் பிட விண்ணப்பத்தில் இந்த ஆண்டு முதல்முறையாக வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.விண்ணப்ப விநியோகம், கட் ஆப் மதிப்பெண் வெளியீடு, கலந்தாய்வு உள்ளிட்ட மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக் கான முன்னேற்பாடுகள், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகின்றன.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தொழில்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறை களை ஜூலை 31-ம் தேதிக்குள் நடத்தி முடித்துவிட வேண்டும். எனவே,பொது கலந்தாய்வு மட்டுமல்லாமல், பிளஸ் 2 துணைத் தேர்வெழுதி வெற்றி பெறும்மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வையும் அதற் குள் அண்ணா பல்கலைக்கழகம் முடித்தாக வேண்டியுள்ளது.இதையெல்லாம் கருத்தில் கொண்டு பொறியியல் கலந் தாய்வை ஜூலை முதல் வாரத் தில் தொடங்க ஏற்பாடு செய் திருப்பதாக தமிழ்நாடு பொறி யியல் மாணவர் சேர்க்கை செய லாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.