அந்த முடிவுகளின் விவரம்:அதில் கடந்த 2005-06-ஆம் ஆண்டில் தொடக்கக் கல்வியில் 2 சதவீதமாக இருந்த மாணவர்களின் இடைநிற்றல் 2013-14-ஆம் ஆண்டில் 4 சதவீதமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வியில் இருந்து 6-ஆம் வகுப்பு உள்ளிட்ட வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 95.4 சதவீதமாக உள்ளது.ஆசிரியர் மாணவர் விகிதம் குறைவு: கடந்த 2005-06-ஆம் ஆண்டில், தொடக்கக் கல்வித் துறையில் 3 லட்சத்து 31,513 ஆக இருந்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 2013-14-ஆம் ஆண்டில் 5 லட்சத்து 8 ஆயிரத்து 788 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஆசிரியர் மாணவர் விகிதம்1:29 என்பதில் இருந்து 1:18 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. அதாவது 18 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவில் இது குறைந்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.