Pages

Wednesday, May 20, 2015

இக்னோ தொலைதூரக் கல்விக்கு ஜூன் 15 முதல் விண்ணப்பம்

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) தொலைதூரக் கல்வி அடிப்படையில் கல்வி கற்க விரும்புவோர் ஜூன் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பல்கலைக்கழகத்தின் கொங்கு பொறியியல் கல்லூரி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.குப்புசாமி வெளியிட்ட அறிக்கை:

இக்னோ பல்கலை.யில் 148 வகையான பாடப் பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு கற்றுத் தரப்படும் பாடப் பிரிவுகள் பல்கலை. மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டவையாகும். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை, இக்னோ மதுரைமண்டலத்தின்கீழ் செயல்பட்டு வரும் பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியின் இக்னோ மையத்தில் ரூ.200 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.இளங்கலை, முதுகலை, பட்டயப் பாடப் பிரிவுகளுக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களைஅனுப்ப வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 7-ஆம் தேதி ஆகும்.
இளங்கலை ஆயத்தப் படிப்பு, சான்றிதழ் படிப்புகளுக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதற்கு மேல் தாமதக் கட்டணமாக ரூ.300 செலுத்தி ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.http://www.ignou.ac.in/ என்ற ஆன்லைன் முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கூடுதல் விவரம் அறிய இக்னோ கல்வி மையத்தை 04294-225252, 226696 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.