நீளமான 270 பைனரி எண்களை ஒரே நிமிடத்தில் மனப்பாடம் செய்து நினைவு கூறி,கோவையைச் சேர்ந்த பிரெஞ்ச் ஆசிரியர் கின்னஸ் சாதனை படைத்தார்.கோவையைச் சேர்ந்த பிரெஞ்ச் மொழி ஆசிரியர் அரவிந்த் (36).
கடந்த 2011-ஆம் ஆண்டு ஜெயசிம்ஹா என்பவர் 264 பைனரி எண்களை மனப்பாடம் செய்து ஒரு நிமிடத்தில் அதை நினைவு கூறி படைத்த சாதனையை முறியடிக்க அரவிந்த்,தீவிர பயிற்சி ஈடுபட்டு வந்தார்.இதற்காக கின்னஸ் நிறுவனத்திற்கு அவர் விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பம் ஏற்றுக் கொண்டு போட்டிக்கான விதிமுறைகள் அடங்கிய தொகுப்பை கின்னஸ் நிறுவனம் அவருக்கு அனுப்பி வைத்தது.இதற்காக கோவை- அவினாசி சாலையில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் கலை மையத்தில் கின்னஸ் சாதனை முயற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு கே.எம்.சி.எச். மனநல மருத்துவர் ஸ்ரீனிவாசன், பி.பி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பிரகாசம் ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றனர். அப்போது, 270 பைனரி எண்களை சரியாக நினைவு கூறி முந்தைய சாதனையை அரவிந்த் முறியடித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
ஒரு நிமிடத்தில் 270 எண்களை நினைவு கூர்ந்து சாதனை படைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காக தொடர்ந்து தன்னிச்சையாகப் பயிற்சி எடுத்தேன். படிக்கும் பாடங்களை அடிக்கடி நினைவு கூரும் பழக்கம் சிறு வயது முதலே இருந்து வந்தது. புதிய மொழிகளைக் கற்கும்போதும் அதில் உள்ள வார்த்தைகள், தொடர்களை நினைவில் வைத்து கொள்ளும் பழக்கமும் இருந்ததால் இந்த சாதனையை என்னால் செய்ய முடிந்தது என்றார்.அரவிந்துக்கு பிரெஞ்ச், இத்தாலி, ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளும் தெரியும். அயல்நாட்டு மொழியைக் கற்றுக் கொடுப்பதற்காக "மெடுஷா' என்ற அகாதெமியை நடத்தி வருகிறார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.