Pages

Sunday, April 5, 2015

நெருங்குகிறது எஸ்.ஐ., பதவி தேர்வு: 1.65 லட்சம் பேர் தயார்


புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள, 1,078 போலீஸ் எஸ்.ஐ., பதவிக்கான தேர்வு நெருங்குவதால், அந்த பதவிக்கு, 1.65 லட்சம் பேர், குறிவைத்து உள்ளனர்.தமிழக காவல் துறையில், 20 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குற்ற நிகழ்வுகளை கட்டுப்படுத்த முடியாமல், காவல் துறை தள்ளாடுகிறது.


இதை சமாளிக்க, புதிதாக, 1,078 போலீஸ் எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்ய அரசு முடிவு செய்து, கடந்த மாதம், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக அறிவிப்பு வெளியிட்டது.இதையடுத்து, தமிழகம் உட்பட, வெளி மாநிலங்கள் வசிக்கும், 1.65 லட்சம் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர். மொத்த ஒதுக்கீட்டில், 20 சதவீதம், காவல் துறையில் பணிபுரிவோர், அமைச்சுப் பணியாளர்களின் பெண் வாரிசுதாரர்களுக்கும், விளையாட்டுத் துறைக்கு, 10 சதவீதம், போலீசாரின் வாரிசுகளுக்கு, 10 சதவீதம் ஒதுக்கீடு இருப்பதால், இந்த பிரிவுகளைச் சேர்ந்தோரும் அதிகளவில் விண்ணப்பித்து உள்ளனர்.பொது ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, மே 23ம் தேதி; காவல் துறையினருக்கு, அதற்கு அடுத்த நாள் எழுத்துத் தேர்வு நடக்கிறது. பின், உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு, உடல் திறன் போட்டி தேர்வு என, வெவ்வேறு நிலைகளில் தேர்வு நடக்கிறது.எழுத்துத் தேர்வில், 35 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்களில் இருந்து, இடஒதுக்கீடு அடிப்படையில், 1:5 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர்.உடல் தகுதி தேர்வெல்லாம் முடிந்த பின், 1:2 என்ற விகிதத்தில், நேர்காணலுக்குஅழைக்கப்படுவர்.இந்த தேர்வு, 32 மையங்களில், மூன்று மணி நேரம் நடக்க உள்ளது.


மதிப்பெண் விவரம்


பொதுப்பிரிவுக்கு...

எழுத்துத் தேர்வு 70 

உடல் திறன் போட்டி 15

என்.சி.சி., 2

ஸ்போர்ட்ஸ் 2

என்.எஸ்.எஸ்., 1

நேர்காணல் 10

காவல் துறைக்கு...

எழுத்துத் தேர்வு 85

தேசிய அளவில்

தங்கப்பதக்கம் 3

வெள்ளிப்பதக்கம் 3

வெண்கலத்திற்கு 2

சிறப்பு மதிப்பெண் 5

நேர்காணல் 10.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.