ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரும் மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சேர்ந்த லினட் அமலா சாந்தகுமாரி இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார். மனு விவரம்: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் திருவாரூர் மாவட்டம் திருநெல்லிக்காவல் அரசு நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக 2007இல் நியமிக்கப்பட்டேன். எம்பில் படித்துள்ளதால் உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளியில்
பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற எனக்குத் தகுதி உள்ளது. என்னைவிடத் தகுதி குறைவான பலரும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதனால் எனக்கு பதவி உயர்வு அளித்து தூத்துக்குடிக்கு இடமாறுதல் அளிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டதற்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் தடையில்லாச்சான்று
அளிக்குமாறு அறிவுறுத்தினர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு இடமாறுதல் பெறுவதற்காக 2014 மே, ஜூன் மாதங்களில் கலந்தாய்வில் கலந்து கொண்டேன்.
எனக்கு இடமாறுதல் கிடைக்கவில்லை. ஆசிரியர் பணியிடமாறுதல் கலந்தாய்வில் பெரும்பாலான காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. இதனால் உண்மையான
காரணங்களுக்காக இடமாறுதல் கோருபவர்களுக்கு மாறுதல் கிடைக்காமல் போகிறது.
மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மாவட்டத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அளிக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலர் அதை
முன்னணி பத்திரிகைகள் அல்லது பிரத்யேக இணையதளங்களில் வெளியிடவேண்டும். சட்டப்படியான இந்த நடைமுறையைப் பின்பற்றினால் தான் வெளிப்படையாக
இடமாறுதல் நடைபெறும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.