Pages

Tuesday, March 17, 2015

பேனா மூடியை விழுங்கியதால் வகுப்பறையில் துடி துடித்து உயிரிழந்த 1-ம் வகுப்பு மாணவன்

வகுப்பறையில் விளையாடிய போது விசிலடிக்க பயன்படுத்தப்பட்ட பேனா மூடியை எதிர்பாராத விதமாக விழுங்கிய சிறுவன் பள்ளியிலேயே துடி துடித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவினாசி முத்துச்செட்டி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் தான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தாமஸ்புரத்தை சேர்ந்த அந்தோணிராஜ் என்பவரின் மகன் நவநீதன் ஜோசப் 1-ம் வகுப்பு படித்து இவன் சக மாணவர்களுடன் வகுப்பறையில் விசிலடித்து விளையாடி கொண்டிருந்த போது திடீரென துடி துடித்து மயங்கி விழுந்தான்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வகுப்பு ஆசிரியை உடனடியாக மாணவனை அவினாசி அரசு மருத்துவ மனைக்கு தூக்கிச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து கதறி அழுதபடியே மருத்துவ மனைக்கு வந்த மாணவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தினருடன் தகராறில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.