Pages

Monday, February 9, 2015

மாணவர்களின் ஆரோக்கியம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு என்ன?

மாணவ, மாணவியருக்கு டெங்கு, பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பதுடன், பெற்றோருக்கும் அறிவிக்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

* பள்ளிக் குழந்தைகள், சுகாதாரமான பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். இதன்படி, அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்; உணவு உண்பதற்கு முன், கைகளை கழுவ வேண்டும்.

* வகுப்பறைகளை சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்திருக்க வேண்டும். வகுப்பறை, கழிவறையை சுற்றி தண்ணீர் தேங்கினால், உடனடியாக தலைமை ஆசிரியருக்கு, மாணவ, மாணவியர் தெரிவிக்க வேண்டும்.

விழிப்புணர்வு

* கொசு பெருக்கத்தை தடுக்க, குடிநீர் பானைகள், தண்ணீர் தொட்டிகளை மூட வேண்டும்.

* டெங்கு, பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வை, மாணவ, மாணவியரிடம் ஏற்படுத்த வேண்டும்.

* மாணவ, மாணவியருக்கு, கடுமையான காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், ஆரம்ப சுகாதார மையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்; பெற்றோருக்கும் அறிவுறுத்த வேண்டும்; சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும்.

* வரும் 10ம் தேதி, குடற்புழு நீக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில், குடற்புழு நீக்க மருந்து பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும்; விடுபட்ட குழந்தைகளுக்கு 13ம் தேதி சிறப்பு முகாம் நடக்கும்.

* இதை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.