Pages

Tuesday, January 13, 2015

தேர்வில் கிரேடு முறையை பின்பற்ற பல்கலைகளுக்கு யு.ஜி.சி. வலியுறுத்தல்

வரும் கல்வியாண்டு முதல், நாடு முழுவதும் இருக்கும், 400 பல்கலைக்கழகங்கள், தேர்வில், கிரேடு முறையை பின்பற்ற, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., வலியுறுத்தி உள்ளது.

தற்போது, பெரும்பாலான பல்கலைக்கழகங்கள், தேர்வில், மதிப்பெண் வழங்கும் முறையை பின்பற்றி வருகின்றன.

இந்நிலையில், கல்வித்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில், மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டம், அண்மையில் டில்லியில் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, வரும் கல்வியாண்டு முதல், பல்கலைகள், கிரேடு முறையை பின்பற்ற யு.ஜி.சி., வலியுறுத்தி உள்ளது.

இத்திட்டத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்த, மூத்த உறுப்பினர்கள் அடங்கிய குழுவை, பல்கலைகள் அமைக்கலாம் எனவும், அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் யு.ஜி.சி., மேற்கொள்ளும் எனவும், அதன் தலைவர் வேத பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.