Pages

Tuesday, January 13, 2015

ஆம்பூர் அருகே தொடக்க கல்வி அதிகாரியை போதையில் தாக்க முயற்சி

மாதனூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலரை, குடிபோதையில் தாக்க முயன்றதாக கூறப்படும் பள்ளி தலைமை ஆசிரியர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகேயுள்ள அகரம்சேரியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக நவசீலன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மாதனூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் வீடு கட்டுவதற்காக 15 லட்சம் கடன்கேட்டு நவசீலன் விண்ணப்பித்துள்ளார்.
இதில் முதல் தவணையாக 7.5 லட்சம் வழங்கப்பட்டது. பின்னர் 2வது தவணை கேட்டு நவசீலன் உதவி தொடக்கக் கல்வி அலுவலரை அணுகியுள் ளார். இதைதொடர்ந்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வெங்கடாசலம், நவசீலன் வீடு கட்டுவது குறித்து ஆய்வு செய்துள்ளார். குறிப்பிட்ட விதிப்படி நவசீலன் வீடு ஏதும் கட்டப்படவில்லை என்பதால் 2வது தவணை வழங்க முடியாது என அலுவலர் வெங்கடாசலம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நவசீலன் குடிபோதையில் மாதனூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பணியில் இருந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வெங்கடாசலத்திடம் வாக்குவாதம் செய்ததோடு அவரை தாக்க முயன்றதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரித்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ரங்க நாதன் தலைமை ஆசிரியர் நவசீலனை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.