Pages

Wednesday, December 31, 2014

பாலிசி பத்திரம்தொலைந்தாலும் பணம் பெறலாம்

இன்சூரன்ஸ் பாலிசி யின் முதிர்வு தொகை பெறுவது குறித்து, எல்..சி.,யின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் மண்டல மேலாளர்
வி.விஜயராகவன்: பாலிசி யின் தன்மையின் அடிப்படையில், பாலிசி முதிர்வு குறித்த தகவல்கள், மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு முன்பே,
கடிதம், பதிவுத் தபால், மெயில் மூலமாக, பாலிசிதாரருக்கு தெரிவிக்கப் படும்.
அந்த சமயத்தில், அதை, 'கிளைம்' செய்ய வில்லை எனில், அதன் பின், மூன்று ஆண்டுகளுக்குள், எப்போது வேண்டுமானாலும் பாலிசிப் பத்திரத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கொடுத்து, பாலிசிதாரர் அல்லது அவரின் வாரிசுகள் கிளைம் செய்யலாம். பாலிசிப் பத்திரத்தை, பாலிசி எடுத்த கிளையில் சமர்ப்பித்து, முதிர்வு தொகையை பெறலாம். மூன்று ஆண்டுகள் வரை, கிளைம் செய்யா மல் இருக்கும் இன்சூரன்ஸ் பாலிசிகள், எல்..சி.,யின் மத்திய அலுவலகத்துக்கு அனுப்பப்படும். இந்த பாலிசி தொகைகள் அனைத்தும், தனியாக ஒரு வங்கிக் கணக்கில் பராமரிக்கப்படும். இந்தக் கணக்கிலிருந்தும், பணத்தை பாலிசிதாரர் அல்லது வாரிசுதாரர் பெற முடியும்.
சிலர், பாலிசி பத்திரத்தை தொலைத்து விட்டதாலும், பணத்தை திரும்பப் பெறாமல் இருக்கின்றனர். இவர்கள், பாலிசி எண், பிறந்த தேதி ஆகியவற்றின் அடிப்படையில், பாலிசியின் விவரத்தை, பாலிசி எடுத்த இன்சூரன்ஸ் அலுவலகத்தில் பெற முடியும். அதன்பின், பாலிசி யின் கவரேஜ் தொகை யின் அடிப்படையில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதாவது, பாலிசியின் கவரேஜ் தொகை மிகவும் குறைவாக இருந்தால், முகவரி, புகைப்பட அடையாளச் சான்று, பாலிசி பத்திரம் தொலைந்த விவரம் கொடுத்து, கிளைம் பெற முடியும்.
பாலிசியின் கவரேஜ் தொகை அதிகமாக இருந்தால், பத்திரிகைகளில் விளம்பரம் செய்து, யாராவது ஒருவரிடம், 'சூரிட்டி' வாங்கித் தருமாறு கூறுவர். இதில், 'பாலிசி என்னுடையது தான். அதன் ஒரிஜினல் பத்திரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில், ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், அதற்கான முழுப்பொறுப்பையும் நானே ஏற்கிறேன்' என, கடிதம் அல்லது 'பாண்ட்' பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொள்வர்.
கோரப்படாத இன்சூரன்ஸ் தொகையைத் திரும்பப் பெற, கீழ்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வாரிசுதாரர் மற்றும் பாலிசிதாரரின் தற்போதைய முகவரிச் சான்று; புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று; பாலிசி பத்திரம் ஒரிஜினல்; பாலிசிப் பத்திரம் தொலைந்து விட்டால், பாலிசியின் எண், பிறந்த தேதி, பாலிசிதாரர் பெயர், பாலிசி எடுத்த கிளையின் முகவரி கொடுத்து, பாலிசி விவரத்தைத் தெரிந்துக் கொள்ளலாம்.


பணத்தை பெறுபவரின் வங்கிக் கணக்கு விவரம், ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இருந்தால், அவர்களில் யார் பணத்தைப் பெற வேண்டும் என்பதை, மற்ற வாரிசுகள் நியமனம் செய்து கையெழுத்திட்ட கடிதம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.