சென்னையில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்
பாலாஜியுடன், போக்குவரத்து
கழகத்தின் 11 சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில்
சுமூகமான
முடிவு
எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் திரும்பப்
பெறப்பட்டுள்ளது.
இதனால்,
கடந்த நான்கு நாட்களாக போக்குவரத்து
இல்லாமல்
அவதிப்பட்டு
வந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.
ஊழியர்கள்
ஸ்டிரைக் : சம்பள உயர்வு, நிரந்தர
பணி நியமனம் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து கழக
ஊழியர்கள்
கடந்த 4 நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர்.
அண்ணா தொழிற்சங்கம் நீங்களாக தொமுச, சிஐடியு உள்ளிட்ட
11
தொழிற்சங்கத்தை
சேர்ந்த ஊழியர்கள் இந்த போராட்டத்தில்
ஈடுபட்டு
வந்தனர். இதனால் தமிழகம் முழுவதும்
குறைந்த அளவிலான
பஸ்களே
அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த
தொழிலாளர்களைக்
கொண்டு இயக்கப்பட்டு வந்ததன.
போராட்டத்தை
வாபஸ் பெறுமாறு பல்வேறு அரசியல் கட்சிகளைச்
சேர்ந்த
தலைவர்களும், மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அமைச்சருடன்
பேச்சு : போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்
பாலாஜி
தலைமையில் சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்கு
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய
சிஐடியு
சவுந்தரராஜன் பேசுகையில், ஊழியர்களின் சம்பள
பிரச்னை
தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த
குழு ஒன்று அமைக்கப்படும் என
அமைச்சர் உறுதி அளித்தார்.
பேச்சுவார்த்தைக்கான
முத்தரப்பு குழு ஓரிரு நாளில்
அமைக்க
நடவடிக்கை
எடுக்கப்படும் எனவும் அமைச்சர்
தெரிவித்துள்ளார்.மேலும் அமைச்சருடனான பேச்சுவார்த்தையில்
சுமூக முடிவு எட்டப்பட்டதை அடுத்து
போராட்டத்தை திரும்ப பெற
தொழிற்சங்கங்கள்
முடிவு செய்துள்ளன. ஊழியர்கள் மீண்டும்
வேலைக்கு
திரும்பும் பணி இன்றும், நாளையும்
நடைபெறும் என
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.