ஆறாம் வகுப்பு மாணவியை கொன்றது பற்றி, 10ம் வகுப்பு மாணவன் கொடுத்த வாக்குமூலம், போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், மாச்சனூர் அரசு பள்ளி, ஆறாம் வகுப்பு மாணவியை கொலை செய்த, அதே பள்ளி, 10ம் வகுப்பு மாணவனை, போலீசார், ஓசூரில் கைது செய்தனர்.
மாணவனின் வாக்குமூலம்:
பள்ளியில் இருந்து, கடந்த 15ம் தேதி, வீட்டுக்கு சென்ற போது, மாணவியை குறுக்கு வழியில் அழைத்துச் செல்வதாக கூறி, சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றேன். யாரும் இல்லாத பகுதியில், அவரது அந்தரங்க உறுப்பை காட்ட சொன்னேன். அவர் துணியை கழற்ற மறுத்து, அவருடைய அப்பாவிடம் சொல்வதாக கூறினார். இதையடுத்து, அவரது கழுத்தை நெரித்தேன். மயக்கமடைந்து விழுந்தவளை, அவள் அணிந்து இருந்த, துப்பட்டாவால் கழுத்தை இறுக்கினேன். அவளது ரிப்பன்களை எடுத்து, கை, கால்களை கட்டினேன். அருகில் கிடந்த பழைய பாட்டிலை எடுத்து, தலையில் அடித்து, உடைந்த கண்ணாடியால் மார்பு பகுதியில் கிழித்தேன். அவரது இங்க் பேனாவை எடுத்து, அந்தரங்க உறுப்பில் குத்தி கொலை செய்தேன். நண்பர்களுடன் சேர்ந்து, அடிக்கடி மொபைல் போன் மற்றும் லேப் - டாப்களில், புளூபிலிம்' பார்ப்பேன். அதனால் தான், அவளை நிர்வாணமாக பார்க்க முயன்றேன். இவ்வாறு, மாணவன் கூறியுள்ளான்.
உறவினர்கள் போராட்டம்:
இந்நிலையில், மாணவனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது குறித்து, தகவலறிந்த மாணவியின் உறவினர்கள், காவல் நிலையம் முன் குவிந்தனர். கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும், கைது செய்ய வேண்டும் எனவும், உடல் பரிசோதனையை, அரசியல் கட்சி நிர்பந்தமின்றி, மேற்கொள்ளவும் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களை அடித்து விரட்டினர். சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. மாணவர்கள், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்பகுதியில், 15 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வேப்பனேரி அரசு பள்ளியை, பெற்றோர் பூட்டு போட்டு பூட்டி, மாணவர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று பகல், 12:00 மணிக்கு, கலெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார், போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினர். கோரிக்கைகளை ஏற்பதாகவும், அரசுக்கு தெரியப்படுத்தி, மேல் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதையடுத்து, இரண்டு மணி நேரம் நடந்த மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. பின், மாணவியின் உடல், அவரது சொந்த ஊரில், மாலை 6:30 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
அரசியல் தலையீடு:
'அரசியல் கட்சிகள், தங்கள் ஜாதியைச் சேர்ந்த, மாணவர்களை காப்பாற்ற, கொலை வழக்கில், மூக்கை நுழைத்துள்ளன. அவர்களை திருப்திப்படுத்த, போலீசார் குற்றவாளிகளை தப்ப விட்டுள்ளனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, கொலை குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என, மாணவியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதல்வர் உத்தரவு:
மாணவியின் குடும்பத்திற்கு, மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டு உள்ளார். மேலும், இவ்வழக்கில் புலன் விசாரணையை விரைவாக முடித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், டி.ஜி.பி.,க்கு, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
Manavarlai kandikakudathu, avarlain manam punpadakudathu yentru kurum "Educationalist" kale parthirkala intha mudivai.
ReplyDeleteகட்டாய கல்விச் சட்டம் ஆசிரியர்கள் மீது மாணவர்களின் மதிப்பு குறைந்து வருவதற்கு இது ஒரு சம்பவ ம்
ReplyDelete