Pages

Monday, December 1, 2014

"அதிகம் பேருக்கு கல்வியளித்தாலும், தரத்தில் தாழ்ந்து விட்டோம்"


நாம் குறைந்த செலவில், அதிக மாணவர்களுக்கு கல்வி அளிப்பதில் வெற்றி பெற்று இருக்கிறோம். ஆனால், கல்வி தரத்தில் தாழ்ந்து விட்டோம், என, இந்திய பல்கலைக்கழங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலர், சர்கான் கமர் பேசினார்.


வசதியின்மை காரணம்

போரூர், ஸ்ரீ ராமச்சந்தரா பல்கலையில் 20வது பட்டமளிப்பு விழா நடந்தது. அதில், சிறப்பு தேர்ச்சி பெற்ற 11 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கி, இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலர் சர்கான்கமர் பேசியதாவது: பாகுபாடு இல்லாத உயர் கல்வியை எல்லாருக்கும் நம்மால் கொடுக்க இயலவில்லை; அதற்கு, பொருளாதார வசதியின்மையே காரணம். தற்போது 20 சதவீதத்தினரே உயர் கல்வியில் சேருகின்றனர். அடுத்த, ஐந்து ஆண்டுகளில் 30 சதவீதமாகவும், அடுத்த 20 ஆண்டுகளில், அது 50 சதவீதமாகவும் இந்த சேர்க்கை விகிதத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வியை விரிவுபடுத்தி அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். அதன் தரத்தையும் நாம் உயர்த்த வேண்டும்; மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியை விரும்புகின்றனர்; அதன் மூலம்தான், நல்ல வாய்ப்புகளையும் வருவாயையும் பெற முடியும் என, அவர்கள் நம்புகின்றனர்.

அரசு நிதி குறைவு

நாம் குறைந்த செலவில், அதிக மாணவர்களுக்கு கல்வி அளிப்பதில் வெற்றி பெற்று இருக்கிறோம். ஆனால், கல்வி தரத்தில் தாழ்ந்துவிட்டோம். உயர் கல்வி நிலையங்களில், முதலீடு வசதிகள் குறைந்து உள்ளதே, அதற்கு காரணம்.

அதனால், திறமையான ஆசிரியர்களும், ஆய்வாளர்களும், பிற கல்வி சூழலும் கிடைக்காத நிலையில் உள்ளது. உயர் கல்விக்கு அரசு ஒதுக்கும் நிதியும் குறைவு. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.