Pages

Wednesday, December 24, 2014

வேலூர் அருகே மாணவி பலாத்கார கொலை: அரசிடம் அறிக்கை கேட்கிறது தேசிய மகளிர் ஆணையம்

வேலூர் அருகே அரசு பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பள்ளி கல்வி அதிகாரி அறிக்கை அனுப்ப தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காங்குப்பம் பகுதியை சேர்ந்த விஜயகுமாரின், கடைசி மகள் கீர்த்திகா(11). கடந்த 16ம் தேதி பள்ளிக்கு சென்ற கீர்த்திகா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுதொடர்பாக அதே பள்ளி 10ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சிறுமி பலத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக பள்ளிக்கல்வி துறை இயக்குனருக்கு, தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள் ளது. இதைத்தொடர்ந்து, வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குமார் அறிக்கை தயார் செய்வதற்கு, தமிழக பள்ளிக்கல்வி துறை செயலர் சபிதா நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குமார், மாச்சனூர் அரசு பள்ளி மாணவி விவகாரம் தொடர்பாக அறிக்கை தயாரித்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக சிறுமியின் பள்ளி வருகை, பெற்றோர் நிலை, ஆசிரியர்கள் பங்கு, சம்பவம் நடந்த தினத்தன்று பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடு, ஏற்கனவே பள்ளி மீது கூறப்பட்டுள்ள புகார்கள், சிறுமியின் இறப்பிற்கு பிறகு மாவட்ட கல்விதுறையின் நடவடிக்கை, போலீஸ் நடவடிக்கை, குற்றவாளி கைது ஆகியவை குறித்து தகவல்களை தயாரிக்கும் பணியில் வேலூர் மாவட்ட கல்வி துறை ஈடுபட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.