Pages

Wednesday, December 24, 2014

படிக்கும் பள்ளிகளிலேயே எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுமையம்: அரசுக்கு நோட்டீஸ்

அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு மையங்களை ஏற்படுத்தக் கோரும் மனுவுக்கு பள்ளி கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதிமுக மாணவரணி மாநிலச் செயலர் டி.எம்.ராஜேந்திரன் இம்மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவில், கிராமப்புற மாணவர்கள் தொலைதூரம் சென்று தேர்வுஎழுதுவதால் சோர்வு ஏற்பட்டு முழுத் திறனையும் செலுத்த முடியாத நிலைஉள்ளது. இதனால் மதிப்பெண் குறைவு ஏற்பட்டு எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எனவே அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்களை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு நீதிபதி டி.ராஜா முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

1 comment:

  1. போறசி போக்க பார்த்தா வீட்டுக்கு ரெண்டு வாத்தியார்களை நியமிக்க கோர்ட்ல கேப்பாங்களோ

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.