Pages

Sunday, December 28, 2014

பள்ளி மாணவன் மரணத்தில் சந்தேகம்: உடலை பாதுகாப்பாக வைக்க உத்தரவு

பள்ளி மாணவனின் உடலை, பாதுகாப்பாக வைக்கும்படி, திருச்சி, அரசு மருத்துவமனை கல்லூரியின் டீனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தாலுகாவைச் சேர்ந்த, ராமநாதன் என்பவர், தாக்கல் செய்த மனு: என் மகன் ராம்குமார், பெரம்பலூரில் உள்ள, தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 22ம் தேதி, அவன் மரணமடைந்து விட்டதாக, எங்களுக்கு தகவல் வந்தது. தற்கொலை செய்து கொண்டதாக, போலீசில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், என் மகன் கொலை செய்யப்பட்டுள்ளான். இதுகுறித்து, பெரம்பலூர் போலீசில், புகார் கொடுத்தேன். பள்ளி அதிகாரிகள், ஆசிரியருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கவில்லை. அவசரகதியில், எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல், உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். உள்ளூர் போலீசார் மீது, எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி கல்யாணசுந்தரம், நேற்று விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கே.பாலு, அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர். மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 29ம் தேதிக்கு, நீதிபதி கல்யாண சுந்தரம், தள்ளிவைத்தார். இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, உடலை பாதுகாப்பாக வைக்கும்படி, திருச்சி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீனுக்கு, நீதிபதி உத்தரவிட்டார்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.