Pages

Sunday, December 28, 2014

பள்ளிகளில் திருடு போன 'லேப்டாப்'புக்கு தலைமை ஆசிரியரே பொறுப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக 'லேப்டாப்' வழங்கப்படுகிறது. பல பள்ளிகளில் இரவு காவலர் இல்லாததால் லேப்டாப் திருடு போனது.

சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் திருடு போன 'லேப்டாப்'புக்கு ஈடாக ரூ. 17 ஆயிரத்தை தலைமை ஆசிரியர்களே செலுத்த வேண்டும் என கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. சில பள்ளிகளில் 5 முதல் 10 வரையிலான 'லேப்டாப்' திருடு போயுள்ளதால், அதற்கு ஈடான பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் தலைமை ஆசிரியர்கள் திணறுகின்றனர்.
தமிழ்நாடு மேல்நிலைபள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில செயலாளர் ராஜபாண்டியன் கூறியதாவது:- பல பள்ளிகளில் இரவு காவலர் இல்லை. பள்ளிக்கு வந்த 'லேப்டாப்'பை மாணவர்களுக்கு வழங்க காலம் தாழ்த்துவதால் பாதுகாக்க முடியாது. தலைமையாசிரியர்கள் பணம் செலுத்தாவிட்டால் எந்த வித பயனும் கிடைக்காது என மிரட்டுகின்றனர். இதுபற்றி பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பனிடம் புகார் தெரிவிக்க உள்ளோம்,'' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.