தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு கூட்டம் 30.12.2014 அன்று நாமக்கல் மாவட்டத்தில் டாக்டர் வீ.செ.சுப்ரமணியம் மாளிகையில் தலைவர் கு.சி.மணி அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. இடைநிலை ஆசிரியர் ஊதியம் சார்ந்த தமிழக அரசின் கடித எண்.60473/சி.எம்.பி.சி/2014-1, நாள்.10.12.2014, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், டெல்லி பிரதிநிதிகள் மாநாடு, மாநில தேர்தல் மற்றும் தீர்மானங்கள் சார்ந்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
பொதுக்குழுவினர் தாங்கள் தெளிவுபெற வேண்டிய பிரச்சனை இருக்குமாயின் கூட்டத்திற்கு முன்னர் பொதுச்செயலருக்குக் கிடைக்கும்படி கடிதம் எழுதினால் அக்கடிதம் பொதுக்குழுவில் படிக்கப்பட்டு தெளிவான விளக்கம் அளிக்கப்படும். எக்கடிதம் எழுதினாலும் முகவரியுடன், செல்போன் எண்ணையும் சேர்த்து எழுதுங்கள். இப்பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்: க.சாந்தகுமார், தலைமை நிலைய செயலாளர்.
2004-2006 தொகுப்பூதிய காலத்தைக் காலமுறை ஊதியக் காலமாக கோரி தீர்மானம் நிறைவேற்றுதல் சார்பு
ReplyDelete