Pages

Saturday, December 20, 2014

என்.சி.சி., மாணவர்கள் எண்ணிக்கையை 15 லட்சமாக உயர்த்த முடிவு

கல்வி நிறுவனங்களில், தேசிய மாணவர் படை எனப்படும் என்.சி.சி., மாணவர்களின் பலத்தை 2 லட்சத்திலிருந்து, 15 லட்சமாக அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் லோக்சபாவில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: அதற்காக, அனைத்து மாணவர்களுக்கும், என்.சி.சி., பயிற்சி கொடுப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. இதையடுத்தே, மாணவர்களுக்கு என்.சி.சி., கட்டாயமில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை பிரிவுகளில், 10 முதல் 12 சதவீதம் பேர் என்.சி.சி.,யிலிருந்தே தேர்வு செய்யப்படுகின்றனர். இதை அதிகரிக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

என்.சி.சி., படைப்பிரிவுகளில், 26 சதவீதம் பேர் பெண்கள். அடிப்படை வசதிகள் கிடைப்பதை பொறுத்து, எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளிகளில், என்.சி.சி.,யை வரம்புக்கு உட்பட்டு கட்டாயமாக்குவது குறித்து, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இவ்வாறு, பாரிக்கர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.