Pages

Sunday, December 28, 2014

அடுத்த கல்வியாண்டில் 10ம் வகுப்புக்கு முப்பருவ கல்வி: பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வர வாய்ப்பு?

வரும், 2015 - 16ம் கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்த, மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த திட்டம் அமலுக்கு வந்தால், பொதுத்தேர்வு முறையில் மாற்றம் உட்பட பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி, கல்வி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

கிரேடு முறை:
கடந்த, 2012 - 13ம் கல்வி ஆண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை நடைமுறைக்கு வந்தது. இத்திட்டப்படி, சமச்சீர் கல்வித்திட்ட பாடத்தை மூன்றாக பிரித்து, ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும், அக மற்றும் புற மதிப்பீட்டில், மாணவரின் தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அக மதிப்பெண்படி, மாணவரின் தனித்திறனுக்கு, 40 மதிப்பெண், புற மதிப்பீடான எழுத்துத்தேர்வுக்கு, 60 மதிப்பெண்ணும் வழங்கப்படும். மொத்த மதிப்பெண்ணை கணக்கில் எடுத்து, மாணவர்களுக்கு, 'கிரேடு' முறை பின்பற்றப்படுகிறது. முப்பருவ திட்டம் அமலுக்கு வரும் போது படிப்படியாக, 2013 - 14ம் கல்வி ஆண்டில், ஒன்பதாம் வகுப்பு மற்றும், 2014 - 15ம் கல்வி ஆண்டில், எஸ்.எஸ்.எல்.சி.,க்கு நீட்டிப்பு செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், நடப்பு கல்வி ஆண்டில், எஸ்.எஸ்.எல்.சி.,க்கு முப்பருவ கல்வி அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. முக்கிய காரணமாக, பொதுத்தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம், கல்வித்துறைக்கு ஏற்பட்டது. மேலும், மாநில கல்விக்குள் வராத புதிய பாடத்திட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்கள், பொதுத்தேர்வு முறை அமலில் உள்ளதால், உடனடியாக மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்பு கல்வி ஆண்டில், எஸ்.எஸ்.எல்.சி., மாணவருக்கு, பழைய பாடத்திட்டத்தின் படியே, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கழகம் சார்பில், புத்தகங்கள் சப்ளை செய்யப்பட்டு, பழைய முறையிலான பொதுத்தேர்வும் நடத்தப்படும்.
ஆய்வு:
இந்நிலையில், வரும், 2015 - 16ம் கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி., மாணவருக்கு, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சியில் இயங்கும் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சி துறை அதிகாரிகள், தங்களது ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளனர்.
மதிப்பீடு செய்வதில் சிக்கல்
தமிழக அரசின், மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை அதிகாரிகள், வரும் கல்வியாண்டில், முப்பருவ கல்வி முறையை அமல்படுத்த, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முப்பருவ கல்வித் திட்டத்தில், பாடத்திட்டத்தை மூன்றாக பிரித்து, தேர்வு நடத்தப்பட்டு, மதிப்பீடு செய்யப்படுகிறது. அந்த முறையை, பொதுத்தேர்வு திட்டத்தில் உள்ள, எஸ்.எஸ்.எல்.சி.,க்கு கொண்டு வந்தால், மாணவர்களை மதிப்பீடு செய்வதில் சிக்கல் ஏற்படும். மேலும், மூன்று தேர்வுகளையும் சேர்த்து, பொதுத்தேர்வு நடத்துவது போல் நடத்தி, முடிவு வெளியிட வேண்டும். இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஒன்பதாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' திட்டம் அமலில் இருப்பதால், முக்கிய படிப்பான எஸ்.எஸ்.எல்.சி., படிப்பை, பொதுத்தேர்வாக நடத்தினால் தான், மாணவரை சரியான மதிப்பீடு செய்ய முடியும். இல்லையென்றால், மாணவரின் கல்வித்தகுதி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

2 comments:

  1. 10th students Ku tension kuraiyum....paadasumai kuraiyum...creative power and thinking. power increase aagum...so many lesson he learned... 10th best method CCE...pl implement this... Then 10th is follow up work of 9th..

    ReplyDelete
  2. கெட்டது கெட்டுச்சு இன்னும் மீதியும் கெடட்டும் விடுங்கப்பா

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.