Pages

Thursday, December 18, 2014

அரசுப்பள்ளிகளின் 10, 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் பொதுத்தேர்வைப்போல மைய மதிப்பீட்டு முறையில் திருத்தம்

அரசுப்பள்ளிகளின் 10, 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் பொதுத்தேர்வைப்போல மைய மதிப்பீட்டு முறையில் திருத் தும் பணி நேற்று துவங்கியது.

பெரம்பலூர் மாவட்டத் தில் எஸ்எஸ்எல்சி எனப்ப டும் 10ம்வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் மாதம் 12ம்தேதி தொடங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வுகளை உயர்நிலை, மேல்நிலை என மொத்தம் 125 பள்ளிகளைச்சேர்ந்த மாணவ மாணவி கள் எழுதுகின்றனர். அதே போல பிளஸ்&2 வகுப்புக் கான அரையாண்டு தேர்வு கள் டிசம்பர் 10ம்தேதி தொ டங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வுகளை 65 மேல் நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாண விகள் எழுதுகின் றனர்.இந்நிலையில் தேர்ச்சி விகிதத் தை அதிகரிப்பதற்காக கடந்த ஆண்டைப் போல அரையாண்டு தேர்வுக்கான அரசுப்பள்ளி மாணவர்களின் விடைத்தாள்கள் இந்த ஆண்டும் மைய மதிப்பீட்டு முறையில் திருத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வெவ்வேறு பள்ளி ஆசிரியர்களால் விடைத்தாள்கள் திருத்தும்பணி நேற்று தொடங்கியுள்ளது. இதன்படி தமிழ் முதல்தாள் திருத்தும் பணி யில் 105 பட்டதாரி ஆசிரியர்களும், 29 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, முதன் மைக் கல்வி அதிகாரி(பொ) கலையரசி, மாவட்ட கல்வி அதி காரி(பொ)பாலு, நேர்முக உதவியாளர்கள் பிரேம்குமார், தங்கராஜ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் செய்துள் ளனர். விடைத்தாள்கள் திருத்தப்பட்டு ஜனவரி மாதம் பள்ளித் திறக்கப்பட்ட முதல் நாளே மாணவர்கள் கைகளில் வழங்கப்படவுள்ளது.பிறகு அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தரம் பிரிக்கப்பட்டு, மிகக்குறைந்த விழுக்காடு மதிப் பெண் பெற்றவர்கள், தேர்ச்சி பெறாத வர்கள் நிலையிலுள்ள மாணவ, மாணவிகளுக்கு தினந்தோறும் காலை, மாலை நேரங்களில் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்த கல்வித்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த ஆண்டைக் காட்டி லும் அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதமும், அதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதமும் அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2 comments:

  1. ஆசிரியர் பணியிடமாறுதல் மெகா ஊழலுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம் கடும் கண்டணம்

    ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி எனவும், ஆசிரியர்க்கு அடுத்த ஸ்தானத்தில் தான் அந்த கடவுளும் இருக்கிறான் அதற்கு சான்றாக டாக்டர் இராதாகிருஸ்னன், திரு.வி.க, தாராபாரதி போன்ற பலர் வாழ்ந்துள்ளனர்....
    ஆனால் இன்று தமிழகத்தில் ஆசிரியர் பணியிட மாறுதலில் 500 கோடி மெகா ஊழல் நடந்துள்ளது சீ சீ கல்வியில் சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு என சொல்லிக்கொள்ள வெட்கமாயில்லை....

    அலுவலக கடைநிலை ஊழியர் 1000 லஞ்சம் வாங்கினால் அடித்து இழுத்து எப்.ஐர்.ஆர் பதிவு செய்ய சட்டமும்  இருக்கிறது, அதனை தண்டிக்க பள்ளிக்கல்வித்துறை செயளாளர் விழித்துக்கொண்டு இருக்கிறார் ஆனால் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடமாறுதலுக்கு 500கோடி ஊழல் செய்தால் அவருக்கு மாலை மரியாதையோடு வேறு துறைக்கு அனுப்பி விடுக்கின்றனர் இவரை தண்டிக்க சட்டம் இல்லையா??
    இவரை தண்டிக்க பள்ளிக்கல்வி முதன்மை செயளாளர் தூங்கிவிட்டாரா??
    கடைநிலை ஊழியனுக்கு ஒருசட்டம் கல்வித்துறை இயக்குநருக்கு ஒரு சட்டமா?? இதுதான் ஜனநாயகமா??
    தமிழகத்தில் நல்லோன் வகுத்தது நீதியா இல்லை வல்லோன் வகுத்தது நீதியா?? இந்த மெகா ஊழலுக்கு ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

    மேலும் ஆசிரியர் பணியிடமாறுதலில் மட்டும் தான் நடந்துள்ளதா இல்லை 2013ம் ஆண்டின் ஆசிரியர் பணிநியமனங்களிலும் ஊழல் நடந்துள்ளதா என எண்ணத்தோணுகிறது ஆகவே சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயரிய நோக்கோடு இந்த பிரச்சனையை சி.பி.சி.ஐ.டி விசாரிக்கவும் மேலும் நீதி விசாரணக்கு உத்தரவிட தமிழக அரசை எங்கள் கழகம் வலியுறுத்துகிறது....

    மேலும் இப்பிரச்சனையை தீர்க்காவிடில் மத்திய அரசையையும், உச்சநீதிமன்றத்தையும் நாட நாங்கள் முடிவு செய்துள்ளோம் மேலும் இந்த ஊழல் தொடர்பாகவும், ஆசிரியர் பணிநியமனம் தொடர்பாகவும் தமிழகமே எதிர்பார்க்கிற அளவில்,தலநகரம் திரளும் அளவில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், கல்வியாளர்கள்,சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரையும் இணைத்து மாபெரும் அறவழி போராட்டமும், சாகும்வரை உண்ணாவிரத போராடமும் நடைபெறும் எனவும் தெரிவிக்கிறோம்..அதற்கான நாள்,இடம் ஆகியவற்றை கலந்து ஆலோசித்து அறிவிப்போம்...

    தொடர்புக்கு
    ஆர்.செல்லதுரை மாநில தலைவர் cell : 98436 33012
    பி.கபிலன் மாநில செயலாளர் cell: 90920 19692
    பி.இராஜலிங்கம் மாநில பொருளாளர் cell: 95430 79848

    Article by

    P.Rajalingam Puliangudi....
    Pls share this messages

    ReplyDelete
  2. சார் பொறுங்க நாம்தானே பணம் கொடுத்து வாங்கினோம் நாம் திருந்த நம்மவர்களை திருத்த வழி பார்ப்போம்
    சரியா?

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.