பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களின் உயர்கல்வி படிப்பதற்கான அனுமதியை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களே வழங்கும் வகையில் கல்வித்துறை உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த பின், எம்.பில்., பி.எச்டி., போன்ற உயர்கல்வி படித்தால் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும். இதனால் பலர் உயர்கல்வி படிக்க அனுமதி கோரி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்வர்.
தொடக்கம், பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளிகளின் ஆசிரியர்கள் அத்துறைக்கு உட்பட்ட இணை இயக்குனர் அந்தஸ்தில் உள்ளவர்களிடம் அனுமதி பெற வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்தது. இதனால் தொடக்கக் கல்வியில் சம்பந்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலரே அதற்கான அனுமதியை அளிக்கலாம் என உத்தரவிடப்பட்டது. இதேபோல் பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பிரபாகரன், சட்ட ஆலோசகர் வெங்கடேஷன் கூறியதாவது: இணை இயக்குனருக்கு விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் மாதக் கணக்கில் பெண்டிங்கில் உள்ளன.
தொடக்க கல்வித்துறையில் உள்ளதுபோல் பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கும் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களே அனுமதி அளிக்கும் உத்தரவை கல்வித்துறை பிறப்பிக்க வேண்டும். இதனால் காலதாமதம் தவிர்க்கப்படும் என்றனர்.
similarly we can get noc and relieving order when bt asst gets to another job by fresh recruitment
ReplyDelete