திருச்சி, உறையூர் நாச்சியார் பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவரது மகன் சந்தோஷ், 17, இவர், திருச்சி, தில்லைநகர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் மேல்நிலைப் பள்ளியில், ப்ளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். பள்ளி வகுப்பறையில், மின் விளக்கு, மின் விசிறி உள்ளிட்டவை செயல்படுவது இல்லை. குடிநீர் வசதி இல்லாததால், கடந்த மாதம், 9ம் தேதி, பள்ளி உதவி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதனால், பள்ளி நிர்வாகம், மாணவனை சஸ்பெண்ட் செய்து, பள்ளியை விட்டு வெளியேற்றியது. கடந்த அக்டோபர், 10ம் தேதி முதல் இதுவரை, மாணவன் சந்தோஷை பள்ளியில் அனுமதிக்கவில்லை. இதனால், நேற்று காலை, கலெக்டர் அலுவலகத்துக்கு, பெற்றோருடன் வந்த சந்தோஷ், கலெக்டர் ஜெயஸ்ரீயிடம், மீண்டும் பள்ளியில் சேர்க்ககோரி மனு கொடுத்தார். அந்த மனுவில், பள்ளியில் அடிப்படை செய்து தரும்படி கேட்டதால், என்னை சஸ்பெண்ட் செய்து விட்டனர். பெற்றோருடன் சென்று, பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்த போது, மாற்றுச்சான்றிதழ் வாங்கிச் செல்லும்படி, கூறிவிட்டார். எனவே, பள்ளியில், என்னை மீண்டும் சேர்த்துக்கொள்ள உத்தரவிட வேண்டும், எனக் கோரியிருந்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.