கணித பாடத்தை மாணவர்களுக்கு எளிய முறையில் விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, உமாதாணுவின், டி.வி.டி., மற்றும் புத்தக வெளியீட்டு விழா, கோவை மணி மேல்நிலைப் பள்ளி, நானி கலையரங்கில், நாளை(நவம்பர் 24) மாலை 4.00 மணிக்கு நடக்கிறது.
கணித ஆசிரியர் உமாதாணு கூறியதாவது: வாழ்க்கையின் அடிப்படை பாடமாக விளங்குவது கணிதம். மாணவர்கள் கணித பாடத்தை மனப்பாடம் செய்யாமல், யூனுாஸ் எனும் எளிய நடைமுறை திட்டத்தை பயன்படுத்தி கற்பித்து வருகிறோம்.
இவ்விழாவில், எளிய முறை கணித பாட டி.வி.டி., மற்றும் புத்தகம் வெளியிடப்படுகிறது. அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அறிமுக சலுகையாக, 400 ரூபாய் விலையுடைய இந்த டி.வி.டி., 200 ரூபாய்க்கு கிடைக்கும். இந்த டி.வி.டி., மேத் மிஸ் மிஷன் யமுனா வீதி, குரியோ கார்டன், பாரதியார் பல்கலை, கோவை என்ற முகவரியில் கிடைக்கும். விபரங்களுக்கு 93604 82003 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.