Pages

Monday, November 24, 2014

மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவர்கள் வாந்தி மயக்கம்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகேயுள்ள இருகையூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்புவரை 40 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். நேற்று தலைமை ஆசிரியர் அடைக்கலசாமியும், சமையலர் செல்வக்குமாரியும் விடுப்பில் இருந்துள்ளனர்.

சத்துணவு அமைப்பாளர் திருஞாணம் அருகிலுள்ள பள்ளிக்கு சென்றுவிட்டார். இதனால் அருகிலுள்ள சுத்தமல்லி பள்ளியின் உதவியாசிரியர் குமணன் இருகையூர் பள்ளியினை பொறுப்பேற்று நடத்தி வந்துள்ளார். இதனால் மதிய உணவு சமைப்பதற்கு பள்ளியின் எதிரிவீட்டிலுள்ள வேம்பு என்ற பெண்ணை விட்டு சமைக்கச்சொல்லியுள்ளார். மதிய உணவாக தக்காளி சாதமும், முட்டையும் வழங்கியுள்ளனர்.
மதிய உணவினை 23 மாணவ மாணவியர்கள் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் ஆசைத்தம்பி (10) என்ற மாணவனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற மாணவ, மாணவியர்களும் வாந்தி எடுத்தனர். இதனால் பொறுப்பு ஆசிரியர் குணமன் மயக்கம் ஏற்பட்ட 12 மாணவர்கள் மற்றும் 11 மாணவிகளை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உடன் உடையார் பாளையம் ஆர்.டி.ஓ. கருணாகரன், தாசில்தார் திருமாறன் வருவாய் ஆய்வாளர் சம்பத், வி.ஏ.ஓ ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். உணவில் பள்ளி ஏதேனும் விழுந்துள்ளதா? அல்லது வழங்கப்பட்ட முட்டையில் ஏதேனும் குறைபாடா என பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.