ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியராக பீம் குமார் பணிபுரிந்து வருகிறார். இந்த பள்ளியில் 12 ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பணியாற்றுகிறார்கள். தலைமை ஆசிரியர் குமார் ஆசிரியைகளிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இன்று காலையில் 2 ஆசிரியைகள் தலைமை ஆசிரியர் அறைக்குள் வந்த போது அவர்களின் கையைப் பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே தலைமை ஆசிரியர் குமாரை அறைக்குள் பூட்டி சிறை வைத்தனர். பொது மக்களும், மாணவர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர். இதுபற்றி காஞ்சீபுரம் கல்வி அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
TTFB
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.