Pages

Wednesday, October 22, 2014

ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெறாதோர் கவனத்துக்கு

ஆசிரியர் தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் <ஆசிரியர் பணியாற்ற, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; கடந்தாண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 52 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அதில், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணி வழங்கப்பட்டுள்ளது. நிய மனம் செய்யப்பட்டவர்கள், தகுதி சான்றை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், இணையதளத்தில் தகுதி சான்றை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.


ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து வரிசை எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு, அவர்களது தகுதி சான்றை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது; ஒரு வர் மூன்று முறை, தகுதி சான்றை பதிவிறக்கம் செய்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது. பெரும்பாலான ஆசிரியர்கள், இணையதளம் வாயிலாக, தங்களது தகுதி சான்றை பதிவிறக்கம் செய்து கொண்டனர்; இன் னும் பல ஆசிரியர்கள், பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

             கிராமப்புறங்களை சேர்ந்த ஆசிரியர்கள் பலர், போதிய கணினி பயிற்சி இல்லாததால், இச்சான்றை பதிவிறக்கம் செய்யாமல் தவித்ததாக கூறப்படுகிறது; இன்னும் சிலர், "பிரவுசிங்' சென்டர்களுக்கு சென்று, பதிவிறக்கம் செய்ய முயற்சித்தும், தகுதி சான்று கிடைக்கவில்லை என்ற புகாரும் உள்ளது.

               கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "தகுதி சான்றை பதிவிறக்கம் செய்ய முடியாத ஆசிரியர்கள் பலர், இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்; பதிவிறக்கம் வாயிலாக சான்று கிடைக்காதவர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக தகுதி சான்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.