Pages

Wednesday, October 22, 2014

ஜெ., அறிவிப்பை கண்டுகொள்ளாத அதிகாரிகள் : ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி

'50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலையாக தரம் உயர்த்தப்படும்' என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தது, இதுவரை வெறும் அறிவிப்பாகவே உள்ளது. 'மாணவர்கள் நலன் கருதி ஆண்டுதோறும் 100 மேல்நிலைப்பள்ளிகள், 50 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்' என 2014 ஜூலை??ல் நடந்த கல்வி மானியக் கோரிக்கையில் அப்போதய முதல்வர் ஜெ., அறிவித்தார். முதுகலை ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை தொடர்ந்து, தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது; ஆனால், உயர்நிலைப் பள்ளிகள் அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

வழக்கமாக, கல்வி ஆண்டு துவக்கத்தில் இதுபோன்ற அறிவிப்பு வெளியானால் பள்ளிகளை தேர்வு செய்து படிப்பதற்கு மாணவர்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால், பள்ளிகள் பட்டியல் தயார் நிலையில் இருந்தும், காலாண்டுத் தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையில் தரம் உயர்வு அறிவிப்பு வெளியாகவில்லை. கல்வி அதிகாரிகளை கண்டித்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் அக்.,29ல் முதன்மை கல்வி அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் சில சங்கங்களும் போராட்டங்களை அறிவித்து வருகின்றன.
இதுகுறித்து அச்சங்கங்களின் நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: பள்ளிகளுக்கு நீண்ட தூரம் நடந்து சென்று மாணவர்கள் படிப்பதை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் உயர்த்தப்படும். உள்ளூரிலேயே மாணவர்கள் தொடர்ந்து படிக்க வாய்ப்பு ஏற்படும். இதற்காக பொதுமக்கள் பங்களிப்பு காப்பு தொகை ரூ.2 லட்சமும் செலுத்தப் பட்டுள்ளது.
மேல்நிலைப் பள்ளிகள் அறிவிப்பு வெளியான சில நாட்களில், உயர்நிலைப்பள்ளி அறிவிப்பும் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் போராட்டங்கள் அறிவித்துள்ளோம். கல்வித் துறையில் தான் தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சைகள் எழுகின்றன. போராட்டங்களுக்கு முன்பாவது அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம், என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.