தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 9-வது மாநாடு புதுக்கோட்டையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கி.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை மாநிலத் துணைத் தலைவர் பி.கிருஷ்ணசாமி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அரசுத் துறைகளில் உள்ள அனைத்துக் காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பயனளிப்பு ஓய்வுதியத்தை தொடர வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட சிறப்புக் காலமுறை ஊதியம் பெறும் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பின்படி மக்கள் நலப் பணியாளர்களை பிற துறைகளிலுள்ள காலிப் பணியிடங்களில் நிரப்ப வேண்டும். சாலைப் பணியாளாப்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். மாலை 5.45 மணிக்கு மேல் பெண் ஊழியர்களை பணி புரிய கட்டாயப்படுத்தக் கூடாது.
புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும். இழந்த பாராளுமன்றத் தொகுதியை மீண்டும் கொண்டுவர வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவைக் கைவிட வேண்டும். புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேருந்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.