Pages

Saturday, September 20, 2014

ஜம்பிங் வினாத்தாள் முறையை மீண்டும் கொண்டுவர தேர்வுத்துறை உத்தரவு

கடந்த 2013ம் ஆண்டு வரை அறிமுகத்தில் இருந்த, ஜம்பிங் எனப்படும் இரு வினாத்தாள் முறையை, வரும் 25-ம் தேதி தொடங்க உள்ள பிளஸ் 2 தேர்வில் அறிமுகப்படுத்த, மேல்நிலைக்கல்வி தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2013 மார்ச் மேல்நிலைத்தேர்வு மற்றும் அதற்கு முந்தைய மேல்நிலை தேர்வுகளில், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணிதம் ஆகிய ஆறு பாடங்களுக்கு மட்டும், ஒரு மதிப்பெண் வினாக்கள், ஜம்பிங் முறையில் அமைக்கப்பட்டு, ஏ, பி., என இரு வினாத்தாள்கள், தேர்வர்களுக்கு விநியோகிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. ஏ, பி என இரு வினாத்தாள்கள் இருப்பதால், இவற்றை திருத்தி வாங்குவதற்குரிய கால அவகாசம் அதிகமானது.

இதனால் 2013 மார்ச்சுக்கு பிறகு நடந்த தேர்வுகளில் இம்முறை கைவிடப்பட்டு, ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் ஒரே வினாத்தாள் என்பதால், அருகருகே அமர்ந்திருக்கும் மாணவர்கள் காப்பி அடிப்பது, ஒரு சில பள்ளிகளில் சைகை மூலம் ஒரு மதிப்பெண் வினாவுக்கு விடை சொல்வது தொடர்ந்தன. இதனால், மீண்டும் ஜம்பிங் முறையை அறிமுகப்படுத்த தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்கக மேல்நிலை கல்வி இணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி விடுத்துள்ள சுற்றறிக்கை: வரும் 25-ம் தேதி தொடங்கி, அக்.10-ம் தேதி முடிய உள்ள மேல்நிலை தேர்வுகளின்போது, முந்தைய மேல்நிலை தேர்வுகளில் பின்பற்றப்பட்ட ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு, ஏ, பி., ஜம்பிங் முறை வினாத்தாள்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விபரங்களை, முதன்மை கல்வி அலுவலர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு தெரிவித்து, அவர்கள் தேர்வு மைய அறை கண்காணிப்பாளர்களுக்கு தெரியப்படுத்த கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.