இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் அவர்கள் விடுத்த பேட்டியில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள வழக்கு எண். W.P.NO.28785/2012.
உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்களை பல்வேறு பணிகள் செய்ய பயன்படுத்துகிறார்கள். அதில் சம்பள பட்டியல் தயாரிக்கும் பணிகளில் (ECS) ஈடுப்படுத்துவதால் ஆசிரியர் கற்பித்தல் பணி பாதித்து மாணவர்கள் தேர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் இதே நிலை உள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் உளூந்தூர்பேட்டை வட்டாரத்தில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தை சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்பட்டது.
இதற்கு சென்னை உயர்நீதிமன்ரத்தின் நீதியரசர் மதிப்புமிகு. டி.ஹரிபரந்தாமன் வழங்கிய தீர்ப்பில் ஆசிரியர்களை பல்வேறுபட்ட பணிகளுக்கு ஈடுப்படுத்தக்கூடாது "குறிப்பாக சம்பளம் பட்டியல் தயாரிக்கும் பணியில் (ECS) ஈடுபடுத்திடகூடாது, என்றும் அப்படி ஈடுபடுத்தினால் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது பாதிப்படையும் என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.