Pages

Thursday, September 25, 2014

புதிதாக நேரடி நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று நாள் பயிற்சி

2011-2012 மற்றும் 2012-2013 ஆண்டிற்கு முதுகலை ஆசிரியர் நேரடி   நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு
பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு 29.09.2014, 30.09.2014 மற்றும் 01.10.2014 ஆகிய மூன்று நாட்களில் கீழ்க்கண்ட மையங்களில் பாட வாரியாக உண்டு உறைவிட பயிற்சி நடைபெற உள்ளது.

வ.எண் : மாவட்டம்: பயிற்சி நடைபெறும் இடம் : பாடம் பயிற்சி பெறவிருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை
1. சேலம் ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சின்னதிருப்பதி, சேலம் - 8. வேதியியல் 219
2. நாமக்கல் கே.எஸ்.ஆர்.பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, கே.எஸ்.ஆர். கல்வி நகர், திருச்செங்கோடு, நாமக்கல்மாவட்டம் ஆங்கிலம் 317
முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி, இராசிபுரம், நாமக்கல் மாவட்டம் தாவரவியல் 191
3. விழுப்புரம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, சின்னசேலம், விழுப்புரம் மாவட்டம் கணிதம் 283
4. ஈரோடு கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நஞ்சுண்டபுரம், ஈரோடு மாவட்டம் விலங்கியல் 178
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, தாசம்பாளையம், கோபி, ஈரோடு மாவட்டம் வணிகவியல் 313
5. திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.பொறியியல் கல்லூரி, ஆர்.வி.எஸ். நகர், என்.பறைபட்டி, திண்டுக்கல் மாவட்டம் இயற்பியல் 225
6. தஞ்சாவூர் கே. நெடுஞ்செழியன் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், வல்லம் மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் மாவட்டம் பொருளியல் 270

7. மதுரை மகாத்மா மாண்டிச்சோரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கோபாலகிருஷ்ணன் கார்டன், அழகர்கோயில், மதுரை - 1 வரலாறு 178

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.