Pages

Wednesday, September 3, 2014

செப்டம்பர் 6ம் தேதி தென்மாவட்ட மாணவர்களுக்கான சிறப்பு பாஸ்போர்ட் மேளா!

மதுரை கோச்சடை பாஸ்போர்ட் சேவை மையம் சார்பில், மாணவர்களுக்கான சிறப்பு பாஸ்போர்ட் மேளா செப்.,6ல் நடக்கிறது. இதில் தென் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கலாம்.


இதற்கு அவர்கள் ஆன்லைனில் பதிவுசெய்து, விண்ணப்ப பதிவேடு எண்ணுடன், அனைத்து உண்மைச் சான்றுகளுடன் செப்., 3 முதல் 5ம் தேதி வரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேரில் முன்அனுமதி பெற்று, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

பிறப்பு சான்றிதழுக்கு, 26.1.1989க்கு முன் பிறந்தவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் பட்டியலும், அதன்பின் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழும் அவசியம். விண்ணப்ப முகவரி உட்பட விபரங்களுக்கு, www.passportindia.gov.in ல் அறிந்து கொள்ளலாம். 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு பெற்றோர் ஆவணம் ஏற்கப்பட்டு, போலீஸ் அறிக்கை இன்றி பாஸ்போர்ட் வழங்கப்படும்.

பெற்றோருக்கு பாஸ்போர்ட் இல்லையெனில், மாணவர்களுக்கு போலீஸ் அறிக்கை பெற்று தரப்படும். வெளிநாடு செல்ல தடையின்மை சான்று பெற, 10, 12ம் வகுப்பு கல்விச் சான்றை சமர்ப்பிக்க வேண்டும். விடுதி மாணவர்கள் எனில், பெற்றோர் முகவரி ஆவணம், பள்ளி படிப்புச் சான்றிதழ், அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்கள் எனில், இணைப்பு எச் படிவத்தை இணையதளத்தில் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

பெற்றோர் வெளிநாட்டில் வசித்தால், பாதுகாவலர் சமர்ப்பிக்கலாம். இதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து இணையதளத்தில் அறியலாம். விபரங்களுக்கு 0452252 0795ல் தொடர்பு கொள்ளலாம் என மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மணீஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.