சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான, மூன்று நாள் பணி இடைப்பயிற்சி நேற்று துவங்கியது. திருத்தணி அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில், அனைவருக்கும் இடைக்கல்வி திட்டத்தின் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) கீழ், திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களில், அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி இடைப்பயிற்சி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகரன் உத்தரவின் பேரில் நேற்று துவங்கியது.
பள்ளி தலைமை ஆசிரியர் பசுபதி, தலைமை வகித்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் முருகேசன், பயிற்சியை துவக்கி வைத்தார். கருத்தாளர்கள் அகஸ்டியன், ரவி ஆகியோர் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்றல், கற்பித்தல், தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்கான உத்திகள், மாணவர்கள் செயல்பாடுகள், படித்தல், வாசித்தல் போன்றவை குறித்து பயிற்சி அளித்தனர். முதல் நாள் பயிற்சியில், காலை, 10:00 மணி முதல் மாலை, 4:30 மணி வரை, 100 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.