3 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் - அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பு. வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட 19 பதவிகளில் 1,064 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 முதல்நிலை தேர்வு முடிவுகள், 2 வார காலத்திற்குள் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்புத் தலைவர் திரு. சி. பாலசுப்பிரமணியன், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-2 முதல் நிலை தேர்வு முடிவுகள், 2 வார காலத்திற்குள் வெளியிடப்படும் என்றும், 385 உதவி கால்நடை மருத்துவர் பணியிடங்கள் மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான குரூப்-4 தேர்வு அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள், 2 மாதங்களில் வெளியிடப்படும் என்றும், 162 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு, வரும் அக்டோபர் மாதம் 18,19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும், இன்று முதல், செப்டம்பர் மாதம் 21-ம் தேதி வரை ஆன்-லைன் மூலம் இதற்காக விண்ணப்பிக்கலாம் என்றும் டி.என்.பி.எஸ்.சி. பொறுப்புத் தலைவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.