மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால், பள்ளி சிறுவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். பெருங்குடி, திருமலை நகர் விரிவு பகுதியில், ஊர் குளம் ஒன்று உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், அந்த குளம் சீரமைக்கப்பட்டது. அதை, மழைநீர் சேகரிப்பு குளமாக மாற்றும் வகையில், சுற்றுவட்டாரப் பகுதியில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.
திருமலை நகர் பள்ளிக்கூட சாலையில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த மாதம், இந்த சாலையில் மழைநீர் வடிகால் பணிக்காக, ஐந்தடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது. சிமென்ட் தளம் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது பணி, கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரர்கள், பணிக்கான தொகை பெருவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக, பணி நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பள்ளி சிறுவர்கள், பள்ளத்தில் அடிக்கடி விழுந்து, விபத்துகளை சந்திக்கின்றனர். விபரீதம் நிகழும் முன், பள்ளிக்கூட சாலையில் நடக்கும் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.