வெள்ளகோவில் எல்.கே.சி., நகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் முயற்சியால், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புடைய நூலகம், அமைக்கப்பட்டது.
நகராட்சி தலைவர் கந்தசாமி, நூலகத்தை திறந்து வைத்தார். இப்பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். நிகழ்ச்சியில், 4,500 ரூபாய் மதிப்பிலான, நான்கு பெஞ்ச், ரேக் போன்றவை ஸ்பான்சர் மூலம் பெறப்பட்டது. ஒன்று முதல், எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையிலான, உலக அறிவை வளர்த்துக்கொள்ளும்படியான நூல்கள், நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
உதவித்தொடக்க கல்வி அலுவலர் ஜஸ்டீன்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொன்னுசாமி, நகராட்சி கவுன்சிலர்கள் பழனிசாமி, பாலு உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி தலைமையாசிரியர் ராணி வரவேற்றார். அறிவியல் ஆசிரியர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.